பொதுவாக, பிறருடன் ஒப்பிடும் போது, மூத்த குடிமக்கள்,அவர்களுடைய ஆரோக்கியத்தை மிகக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்; ஆனால் அவர்களின் உடல் நலத்தை கவனித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது!

 நவீன மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் வீடுகளிலேயே மூத்த குடிமக்களின் உடல் நலத்தைக் கண்காணிப்பதற்கு வசதியாக சில எளிய மருத்துவக் கருவிகளை/ சாதனங்களை நம்மால் வாங்கி வைத்துக் கொள்ள முடியும்- உதாரணமாக உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை வீட்டிலேயே கண்காணிக்க முடியும் .இத்தகைய கருவிகள் மூலம்  இந்த முக்கிய விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது ஏற்ற இறக்கங்கள் இருந்தால் உடனடியாக கண்டறிந்து சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறமுடியும்.

வீடுகளில் முதியவர்களைப் பார்த்துக் கொள்வதில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் , மூத்த குடிமக்கள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்  வைத்திருக்க வேண்டிய முக்கியமான 7 மருத்துவ கருவிகளாக இவைகளைப் பட்டியலிடுகின்றனர் :

தெர்மா மீட்டர்

ட்டிலே இருக்க வேண்டிய மிக அவசியமான/ அடிப்படை கருவி தெர்மாமீட்டர் ஆகும். பொதுவாக வயதானவர்கள்  ப்ளூ போன்ற தொற்றுகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் . அப்போது அவர்களது உடலின் வெப்பநிலை அதிகமாகி காய்ச்சல் ஏற்படலாம். சில சமயங்களில் வெயில் அதிகமாக இருக்கும்போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படலாம் .பொதுவாக நமது உடலின் வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட் முதல் 99 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்க வேண்டும். தற்போது பலவிதமான தெர்மா மீட்டர்கள் கிடைக்கின்றன. சில வாயில் வைத்து உடலின் வெப்பநிலையை அளக்கக் கூடியவை ;மேலும் சில உடலைத் தொடாமலேயே இன்ஃபரா – ரெட் கதிர்கள் மூலம் உடலின் வெப்பத்தை அளக்கக்கூடியவை .தற்போதைய  கோவிட் காலத்தில் இத்தகைய தெர்மா மீட்டர்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்ஸ் ஆக்சி மீட்டர் 

பல்ஸ் ஆக்சி மீட்டர் என்பது உங்கள் ஆள்காட்டி விரலில் பொருத்திக் கொள்ளக் கூடிய ஒரு எளிய சிறிய கருவி .இதன் மூலம் உங்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைத் தெரிந்துகொள்ள முடியும். மூத்த குடிமக்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியான கால இடைவெளிகளில் பார்த்துக் கண்காணிக்க, இது மிகவும் அவசியமாக இருக்கும். இதன் மூலம் அனீமியா மற்றும் ரத்தக்குழாய்கள் சம்பந்தமான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் . பொதுவாக  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95 முதல் 100 வரை இருப்பது அவசியம்.

BP  மானிட்டர்

 பொதுவாகவே நமது வீடுகளில் இந்தக் கருவி இருப்பது மிக அவசியம். மூத்த குடிமக்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் மற்றும்  ஸ்ட்ரோக் போன்றவை வராமல் தடுக்க இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பொதுவாக நம் ரத்த அழுத்தம் 110 / 70  முதல் 120/ 80  வரை இருக்கலாம் உங்கள் வீட்டில் உள்ள முதியவர் உயர் ரத்த அழுத்தம் அல்லது குறைவான ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், இல்லை என்றாலும் இந்தக் கருவி மூலம் அவர்களுடைய ரத்த அழுத்தம் சீராக உள்ளதா என்று கண்காணிக்க முடியும்.

குளுக்கோ மீட்டர்

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் அல்லது சர்க்கரை வியாதி வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்களுக்கும் இந்த குளுக்கோமீட்டர் மிக அவசியமான ஒரு கருவியாகும். எங்கும்  எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த சிறிய கருவி மூலம் மிக எளிதாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ள முடியும் .ஒரே ஒரு முறை லேசாக அதிலுள்ள ஊசி மூலம் விரலில் குத்தினாலே போதும்- எளிதில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளலாம் . தொடர்ந்து உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணித்து , அதை பதிவு செய்து வைத்திருந்தால்,  உங்களுக்குரிய சரியான சிகிச்சைத் திட்டத்தை வடிவமைக்க மருத்துவருக்கு மிக எளிதாக இருக்கும் .

நெபுலைசர்

ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது மிக அவசியமான , உபயோகமான கருவி. இதன் மூலம் சில மருந்துகளை நேரடியாக நுரையீரல்களுக்கு செலுத்தி , சுவாசத்தை சீராக்கலாம். சுவாசப் பிரச்சினைகள் உள்ள சில மூத்த குடிமக்களுக்கு இது உயிர் காக்கும் கருவியாகவே இருக்கலாம்.

எடை பார்க்கும் கருவி 

இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் இவற்றைப் போன்றே , முதியவர்களுக்கு உடல் எடையும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். மிக அதிக உடல் எடை,அவர்களுக்கு மூட்டு வலி, தசை வலி, இரத்தக் குழாய்களில் பிரச்சினைகள் போன்ற பலவற்றை ஏற்படுத்தலாம். வீட்டில் எடை பார்க்கும் கருவி இருந்தால், BMI அளவைத் தொடர்ந்து கண்காணித்து வரலாம். அதற்கேற்ப உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை திட்டமிடலாம்.

உடனடிக் கவனம் பெறுவதற்கான கருவிகள் 

வீட்டில் தமக்கு திடீரென்று மருத்துவ தேவை ஏற்பட்டால் அதை தெரிவிப்பதற்கோ அல்லது அவசர தேவை ஏற்பட்டால் உடனடியாகப் பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கோ , எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி/அமைப்பு ( system) இருப்பது, முதியவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். உதாரணமாக, திடீரென்று விழுந்து விட்டாலோ, அசௌகரியமாக உணர்நதாலோ, சத்தம் போட்டுக் கூப்பிடவோ, கஷ்டப்பட்டு தொலைபேசியைப் பயன்படுத்தவோ அவசியமின்றி ஒரு பட்டனை அழுத்தினாலே பிறரது கவனத்தை உடனடியாக ஈர்ப்பது போல இருக்க வேண்டும். 

இறுதியாக சில குறிப்புகள்

வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நலனைத் தொடர்ந்து கண்காணிக்க எப்போதும் வீட்டில் சில மருந்துகள், கருவிகள் இருப்பது அவசியம்; ஆனாலும் மருத்துவர்களிடம் சென்று வழக்கமாகச் செய்து கொள்ளும் பரிசோதனைகளைத் தவற விடவே கூடாது. அவர்கள் சரியான கால இடைவெளிகளில் இத்தகைய பரிசோதனைகள் (check ups) செய்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

சென்னையில், அல்சர்வின் “முதியோர் பராமரிப்பு சேவைகள்” ( geriatric care services) மூலம் , இத்தகைய வழக்கமான செக்அப்களுக்கு வீட்டிற்கே மருத்துவர்களை வரவழைக்கவும், வீட்டில் பணிபுரிய நர்ஸ்களை ஏற்பாடு செய்து தரவும் வசதிகள் உள்ளன. மேலும் எமது ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள், உங்கள் வீட்டு முதியோர்களின் உடல்நலம் சார்ந்த முக்கிய விவரங்களைக் கண்காணித்து, அவ்வப்போது, மருத்துவர்களுக்கும் தகவல்களை வழங்குவார்கள். எனவே உங்கள் அன்புக்குரிய முதியவர்கள் நல்ல உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருப்பதை நீங்களும் இந்த அமைப்பின் மூலம் உறுதி செயது கொள்ள முடியும் .